சினிமா
“தமிழ்ப் பெண் ரம்யாவிற்கு வாய்ப்புக் கொடுங்கள்” - நடிகர் விவேக்
“தமிழ்ப் பெண் ரம்யாவிற்கு வாய்ப்புக் கொடுங்கள்” - நடிகர் விவேக்
தமிழ்ப் பெண்ணான ரம்யா பாண்டியனுக்கு இயக்குநர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் பண்பும், அழகும், பதில்களில் பணிவும் கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ போன்ற இயக்குநர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழைத் தாய்மொழியாக கொண்டு, அதை தெளிவாக உச்சரிக்கத் தெரிந்த இவரை தமிழ் திரையுலகம் வரவேற்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.