"குட்டி பாம்.....பெரிய ப்ளாஸ்ட்" - அக்ஷராவை புகழ்ந்த விவேக் ஓப்ராய்

"குட்டி பாம்.....பெரிய ப்ளாஸ்ட்" - அக்ஷராவை புகழ்ந்த விவேக் ஓப்ராய்
"குட்டி பாம்.....பெரிய ப்ளாஸ்ட்" - அக்ஷராவை புகழ்ந்த விவேக் ஓப்ராய்

விவேகம் படத்தில் சில நிமிடங்கள் வரும் காட்சியில் நடித்தாலும், அட்டகாசமாக நடித்துள்ளதாக அக்ஷரா ஹாசனை விவேக் ஓப்ராய் புகழ்ந்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விவேகம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது காலடி தடத்தை பதிவு செய்துள்ளார் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன். படத்தில் அவர் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் மட்டுமே வந்து சென்றாலும் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ள விவேக் ஓப்ராய் அக்ஷரா ஹாசனின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். அக்ஷராவின் சிறப்பான நடிப்பிற்கு பாராட்டுகள் என கூறியுள்ள விவேக் ஓப்ராய், அதனால்   பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். "குட்டி  பாம்.....பெரிய ப்ளாஸ்ட்" எனவும் அக்ஷராவை அவர் புகழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com