\
விவேக் ஓபராய்-க்கு அஜித் சொன்ன நன்றி!

விவேக் ஓபராய்-க்கு அஜித் சொன்ன நன்றி!

விவேக் ஓபராய்-க்கு அஜித் சொன்ன நன்றி!
Published on

அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம்,  ’விவேகம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக் ஓபராய் கூறும்போது, ’விவேகம்’ கதையை கேட்ட பிறகு, அஜித் - சிவா கூட்டணியில் வெளிவந்த வீரம், வேதாளம் படங்களை பார்த்தேன். ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது. இந்தப் படத்தில் என் கேரக்டரின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியில்லை, விவேகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ்ப் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். அஜித்தை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி என்றார் அஜித். இந்த படத்தில் நடிப்பது எனக்குதான் பெருமை என்றேன். நான் ஷாலினியின் ரசிகன் என்பதையும் சொன்னேன்’ என்றார். 

மேலும் அவர் கூறும்போது, ‘சென்னை எனக்கு எப்போதும் பிடித்த இடம். என் உறவினர்கள் பலர் இங்குதான் வசிக்கிறார்கள். சின்ன வயதில் இங்கு தான் சைக்கிளில், காரில் பயணித்திருக்கிறேன். அப்போது நன்றாக தமிழ்ப் பேசுவேன்’ என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com