’ஆடைகளை களைய சொன்னார்’: இயக்குனர் மீது தனுஸ்ரீ தத்தா அடுத்த புகார்!

’ஆடைகளை களைய சொன்னார்’: இயக்குனர் மீது தனுஸ்ரீ தத்தா அடுத்த புகார்!

’ஆடைகளை களைய சொன்னார்’: இயக்குனர் மீது தனுஸ்ரீ தத்தா அடுத்த புகார்!
Published on

நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் புகார்களை சொன்ன நடிகை தனுஸ்ரீ தத்தா இப்போது இயக்குனர் ஒருவர் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

ரஜினிகாந்துக்கு வில்லனாக, ’காலா’ படத்தில் நடித்தவர் நானா படேகர். பாலிவுட்டில் பிரபலமான நடிகரான இவர் மீது, பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தனுஸ்ரீ, தமிழில் ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர். தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் பேசும்போது இந்த பாலியல் புகாரை அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

அவர் கூறும்போது, ‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார். நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதரவாக செயல்பட்டனர்.

இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தினரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம். ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இவ்வாறான நடிகருடன் நடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அப்போது நான் புதுமுக நடிகை என்பதால், ஹீரோயின் ஒழுங்கா கோ-ஆபரேட் பண்ணலை’ என்று எனக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டன. நானா படேகரைப் போன்ற ஆட்கள் பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது. என்னைப் போல தற்போது பல புதுமுகங்களும் இது போன்ற வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.

இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்திருந்தார்.

கணேஷ் ஆச்சார்யா கூறியது பற்றி தனுஸ்ரீ சொல்லும்போது, ‘கணேஷ் சரியான பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத் துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர். அதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்’ என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தனுஸ்ரீயின் புகாரை மறுத்துள்ள நானா படேகர், ‘ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறும்போது நான் என்ன செய்ய முடியும்? அவர் வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி எதிர்கொள்வேன். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, அதனை என் வாழ்வில் தொடர்வேன்’ என்றார்.

(விவேக் அக்னிகோத்ரி)

இந்நிலையில் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி மீது பரபரப்பு புகாரை கூறியுள்ளார் தனுஸ்ரீ. ‘அது ’சாக்லேட்’ படத்தின் ஷூட்டிங். நடிகர் இர்பான் கானுக்கான காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கான தனி ஷாட். அவர் நடிப்பை குளோசப்பாக வெளிப்படுத்த வேண்டும். எனக் கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பில்லை. இந்நிலையில் திடீரென்று டைரக்டர் என்னருகில் வந்தார். ’அவருக்கு எக்ஸ்பிரஷன் வர வேண்டு ம். உன் உடைகளை களைந்துவிட்டு அவர் முன் நில்’ என்றார். நான் அதிர்ந்துவிட்டேன். இதைக் கேட்டு இர்பானும் அதிர்ச்சி அடைந்தார். ‘எனக்கு நடிக்க தெரியும். அதற்காக இப்படியெல்லாம் சொல்லாதீர்கள்’ என்றார். அதே போல அங்கிருந்த சுனில் ஷெட்டியும் இதை கண்டித்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் இயக்குனரின் பெயரை சொல்லாவிட்டாலும் அந்த படத்தின் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரிதான் இதை செய்துள்ளார் என்பது தெரி ய வந்துள்ளது. இந்த இயக்குனர், சமீபத்தில் நடிகை ஸ்வாரா பாஸ்கரை மோசமாக விமர்சித்ததற்காக பரபரப்பாகப் பேசப்பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com