800 திரைப்படத்தில் விஜய்சேதுபதி: விவேக் அட்வைஸ்

800 திரைப்படத்தில் விஜய்சேதுபதி: விவேக் அட்வைஸ்

800 திரைப்படத்தில் விஜய்சேதுபதி: விவேக் அட்வைஸ்
Published on

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை 800 எனும் பெயரில் திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே பலரும் தெரிவித்து வருகின்றனர். படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கை கொடியை கொண்ட சீருடையை அணிந்து இருப்பதை குறிப்பிட்டு விஜய் சேதுபதியை விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து தர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரன் வேடத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் '800‌' என்ற திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உங்களுடைய பார்வைதான் என்னுடைய பார்வை. என்னிடம் கருத்து கேட்கும் அளவுக்கு நான் பெரிய மனிதன் கிடையாது. இருந்தாலும் மக்களால் விரும்பப்படுபவர்கள் மக்கள் என்ன விரும்புவார்கள் என்பதை புரிந்துக் கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com