\
விவேகம் ட்ரெய்லர்... அஜித் ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ்

விவேகம் ட்ரெய்லர்... அஜித் ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ்

விவேகம் ட்ரெய்லர்... அஜித் ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ்
Published on

விவேகம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படத்தின் எடிட்டர் ரூபன் அறிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக வரும் 24 ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விவேகம். வீரம், வேதாளம் பட வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் இயக்குநர் சிவா மூன்றாவது முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அனிருத் இசையில் பாடல்களும் நல்ல வரவேற்பையும் பெற்றது. படம் வெளிவர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படத்தின் எடிட்டர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூக வலத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே வேதாளம் படத்துக்கு ட்ரெய்லர் வெளியிடாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில் விவேகம் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் பல நாட்களுக்காக காத்திருக்கின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com