11ல் வெளிவருகிறது‘விவேகம்’படத்தின் டீசர்

11ல் வெளிவருகிறது‘விவேகம்’படத்தின் டீசர்

11ல் வெளிவருகிறது‘விவேகம்’படத்தின் டீசர்
Published on

அஜித் நடித்து வரும் ‘விவேகம்’படத்தின் டீசர் 11ம் தேதி வெளிவருகிறது. மே 18 அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டீசர் 11ம் தேதியே வெளிவருகிறது என இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சிவா, சாய் பாபாவின் தீவிர பக்தர் என்பதால், அவருடைய முந்தைய படங்கள் போல் இப்படத்தின் டீசரும் வியாழக்கிழமை அன்றே வெளியிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதால் தான் டிசரை முன்னராகவே வெளியிடுவதாகவும் இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். ‘விவேகம்’ டீசர் ஒரு நிமிடம் ஓடும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’ படத்தோடு ’விவேகம்’ படத்தின் டீசரை திரையிட உள்ளார்கள்.

’விவேகம்’ படத்தில் விவேக் ஓப்ராய், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் ஒப்ராய் இந்தியில் நன்கு அறியப்பட்டவர் என்பதால் இப்படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமம் எற்கனவே பெரிய தொகைக்கு விற்கப்பட்டுவிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com