6 மணி நேரத்தில் 15 லட்சம்! விவேகம் டீசர் ஜிவ்!

6 மணி நேரத்தில் 15 லட்சம்! விவேகம் டீசர் ஜிவ்!
6  மணி நேரத்தில் 15 லட்சம்! விவேகம் டீசர் ஜிவ்!

நடிகர் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர், வெளியான 6 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களால் இணையதளத்தில் பார்க்க‌ப்பட்டுள்ளது.

அஜீத், காஜல் அகர்வா, ஸ்ருதிஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கும் படம், ‘விவேகம்’. சிறுத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் குறித்து இயக்குநர் சிறுத்தை சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தயாரிப்பு நிறுவனம் சத்தியஜோதி பிலிம்ஸ் சார்பில் டீசரை வெளியிட அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் நேற்று காலையே கவுண்ட் டவுனும் தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நள்ளிரவு 12 மணியளவில் டீசர் வெளியாது. இதுவரை 15 ‌‌லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் யுடியூப் இணையதளத்தில் கண்டுகளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com