விவேகம் படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள ’விவேகம்’ படம், இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டி பகுதியில் திரையரங்கில் படம் வெளிவருவதற்கு முன்பே, இணையதளங்கள், வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பாடல் காட்சிகள்
வெளியாகியுள்ளன. இக்காட்சிகள் பலருக்கும் தீயாக பரவி வருகிறது. இதனால், படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.