\
விவேகம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்!

விவேகம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்!

விவேகம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்!
Published on

விவேகம் படம் ரிலீசாக இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை சென்சார்போர்டு சான்றிதழ் கிடைக்க இருக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது எனத் தெரிவித்திருக்கிறார் இப்படத்தின் எடிட்டரான ரூபன். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 10ம், தேதி வெளியான விவேகம் பட டீசர் பெரும் வரவேற்பை பெற்றது. 1 கோடியே 83 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்த முதல் டீசர் என்கிற சாதனையையும், அதிகம் பேர் லைக் செய்த முதல் டீசர் என்கிற சாதனையையும் படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அப்படத்தின் எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com