\
’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா

’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா

’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட்: சிலிர்க்கிறார் சிவா
Published on

’விவேகம்’ படத்தில் அஜீத்தின் பைக் ஸ்டன்ட் மிரட்டலாக இருக்கும் என்று அதன் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

அஜீத்குமார், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடித்துள்ள படம், விவேகம். படத்தை இயக்கியுள்ள சிறுத்தை சிவா கூறும்போது, ‘வேதாளம் படம் பாதி முடிவடைந்தபோதே விவேகம் படத்தின் கதையை அஜீத் சாரிடம் சொன்னேன். அவர் பாராட்டி, என்னை நம்பி அதை பண்ணலாம் என்றார். இந்தக் கதை தமிழுக்குப் புதிது. சர்வதேச அளிவில் நடக்கும் கதை. ஸ்பை திரில்லர் படம்தான் என்றாலும் எமோஷனும் இருக்கும். படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பைக் சண்டைக் காட்சி இருக்கிறது. ரிஸ்கான காட்சி. டூப் போடலாம் என சொன்னேன். எந்தக் காட்சிக்கும் டூப் போடமாட்டேன் என்று மறுத்தார். அந்த ரிஸ்க் காட்சியில் தானே நடித்துள்ளார் அஜீத். அந்தக் காட்சி மிரட்டலாக இருக்கும். இதை வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குனர் கலோயன் வோடனிச்சரோவ் அமைத்திருக்கிறார்’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com