
அஜித் நடித்த விவேகம் படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 24ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ்ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால் சமூகவிரோதிகள் விவேகம் படத்தை இணையளத்தில் வெளியிட்டு, சமூகவலைத்தளத்திலும் பகிந்துள்ளனர். முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்ததும் இணையதளத்தில் வெளியாவது திரையுலகினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.