''ஒத்தைக்கு ஒத்த வாடா''... வெளியானது விஸ்வாசம் டிரைலர்!
அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா ‘வீரம்’,‘வேதாளம்’,‘விவேகம்’ ஆகிய மூன்று படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன்
4-வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு
உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் பின்னர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாடல்கள் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதற்கிடையே ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி முதன்முறையாக அஜீத் படம் ரஷ்யாவில் வெளியாகிறது.
ஜனவரி 10-க்கான முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டை கூட வாங்கிவிட்டோம் ஆனால் விஸ்வாசம் டிரைலர் கூட வரவில்லை என சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ்கள் தெறிக்கவிடப்பட்டன.
இந்நிலையில், அஜித்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விஸ்வாசம் தொடர்பான ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். அதன்படி இன்று மதியம் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்