
‘சர்கார்’க்கு போட்டியாக ‘விஸ்வாசம்’ ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்த அஜித் ரசிகர்கள்.
இன்று மாலை வெளியான ‘சர்கார்’ டீசருக்கு காத்திருந்தது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லை. அஜித் ரசிகர்களும் கூடத்தான். என்னதான் விஜய்யும், அஜித்தும் நண்பர்களாக இருந்து வந்தாலும், ரசிகர்கள் அப்படி இல்லை என்பதை சமூக வலைத்தளங்கள் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றன. அஜித் படத்தில் அப்டேட்ஸ் வந்தால் விஜய் ரசிகர்களும், விஜய் படத்தின் அப்டேட்ஸ் வந்தால் அஜித் ரசிகர்களும் கொடூரமாக கலாய்த்து தள்ளுகிறார்கள். இது எல்லா ஹீரோக்களும் உண்டு என்றாலும் விஜய், அஜித் ரசிகர்கள் தான் முதல்வரிசை. டீசரை லைக் செய்வது ஒரு குரூப் என்றால் அதனை டிஸ்லைக் செய்ய ஒரு குரூப். இந்த எண்ணம் எல்லா ஹீரோக்களில் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதுதான் சோகம்.
இந்நிலையில் இன்று மாலை வெளியான ‘சர்கார்’ டீசரை விஜய் ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடி வருகிறார்களோ அதே அளவுக்கு அஜித் ரசிகர்கள் கலாய்த்தும் வருகிறார்கள். ‘சர்கார்’ டீசர் வெளியீட்டை #SarkarTeaser என்ற ஹேஸ்டேக்கில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு போட்டியாக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள் ‘விஸ்வாசம்’ குறித்து எந்த அப்டேட்டும் வராத நிலையிலும் #VISWASAMTSunamiSoon என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
படத்தில் போட்டி இருக்கலாம், ஹீரோக்களுக்கு இடையே கூட ஆரோக்ய போட்டி இருக்கலாம். ஆனால் ஹீரோக்களில் பெயரில் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் செய்துகொள்ளும் அடிதடி ஆரோக்யமானது அல்ல. அவரவர் ஹீரோக்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு போட்டி ஹீரோக்களை கலாய்ப்பதையெல்லாம் யாருமே ஏற்பதும் இல்லை, விரும்புவதும் இல்லை என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாக்களை எல்லாரும் கொண்டாடுவோம் அதுதான் சினிமாவின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.