தமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்!

தமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்!

தமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்!
Published on

விஸ்வாசம் திரைப்படத்தை ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்

அஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படம் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டு சேர்ந்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கோவை சரளா, விவேக், யோகி பாபு, தம்பிராமய்யா உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மீசையை முறுக்குவது மாதிரியான காட்சி இடம்பெற்றுள்ளது. மற்றொரு படத்தில் அஜித் இளமையாக காட்சி அளிக்கிறார். இதன் மூலம் அஜித் இரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சண்டைக்காட்சியில் அஜித் வேட்டி சட்டையுடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று மாலையில் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 18ம் தேதி வெளியாகும் என செய்தி பரவியது. இதனை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். #விஸ்வாசம்திருவிழாஆரம்பம் என்ற தமிழ் ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அஜித் ரசிகர்கள் விஸ்வாசத்தை உலக அளவில் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com