‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன? - எடிட்டர் ரூபன் பதில்

‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன? - எடிட்டர் ரூபன் பதில்

‘விஸ்வாசம்’ படத்தில் பிடித்த காட்சிகள் என்ன? - எடிட்டர் ரூபன் பதில்
Published on

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் எடிட்டர் ரூபன் தனது வேலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் படத்தில் தனக்குப் பிடித்த பகுதிகள் என்ன என்பதையும் ரசிகர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வரும் 10ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘விஸ்வாசம்’.இதில் அஜித் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இருவரும் இடம்பெற்ற ட்ரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியான போது, இவர்களது ரசிகர்களுகிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அதே போல ட்ரெய்லர் வெளியான அன்று சென்னையிலுள்ள பல திரையரங்கங்களின் முன்பாக திரை ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இன்னும் சில தினங்களில் படம் வெளியாக உள்ள நிலையில் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் எடிட்டர் ரூபன். அவர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், “இந்தப் படம் ஒரு மாஸ் மூவி. மேலும் ஃபேமலி எண்டர்டெய்னர் படமாகவும் இருக்கும். மிக அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படமாக இது வந்துள்ளது. பண்டிகை காலங்களில் சரியான பொழுதுபோக்கு படமாக இது இருக்கும். சகல தரப்பினரையும் உள்ளடக்கிய எல்லா விஷயங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகவே இப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்” என்று கூறியுள்ளார். இவருக்கு இந்தப் படத்தை எடிட் செய்வது ஒரு சவாலகவே இருந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் அவர், “இந்தக் கதை அதிமாக திருப்பங்களுடன் போகும். அதேபோல் சண்டை காட்சிகளில் உணர்வுப்பூர்வமான கட்டங்களும் இருக்கும். படத்திற்கு இதை போன்ற திருப்பங்கள் தேவைப்பட்டன. குறிப்பாக இறுதியாக வந்த ட்ரெய்லர் வடிவத்தை தீர்மானிப்பது சவாலாக இருந்தது. பெரும் ரசிகர் கூட்டத்தை திருப்பதியடை வைப்பது பெரிய விஷயம். எதிர்பார்ப்பு கூடவும் கூடாது குறையவும் கூடாது. ஆனால் நாங்கள் சமப்படுத்திவிட்டோம். ட்ரெய்லருக்காக மிக கடினமாக வேலை பார்த்தோம். இயக்குநர் சிவா நிறைய பரிந்துரைகளை முன் வைத்தார். அதே போல தயாரிப்பாளரும் கொடுத்தார். ரசிகர்களின் சுவையை அறிந்து நாங்கள் ட்ரெய்லரை வழங்கினோம். ஆகவே இறுதியாக, எங்கள் டீம் இப்போது சந்தோஷமாக இருக்கிறது” என்கிறார் ரூபன்.

‘விஸ்வாசம்’ படத்தில் இவருக்கு விருப்பமான பகுதி என்ன? அதற்கு இவர், “சண்டைக்காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக மழையில் ஒரு சண்டைக்காட்சி வரும். அதேபோல படத்தின் இரண்டாம் பகுயில் வரும் சண்டை சிறப்பாக இருக்கும். அஜித் எங்கெல்லாம் வில்லனுடன் மோதுகிறாரோ அது சிறப்பாக இருக்கும். இதில் வெறுமனே மாஸ் ஆடியன்ஸுக்கான விஷயங்கள் மட்டுமே இருக்காது. ஆனால் உணர்ச்சிப்பூர்வமாக, ஒட்டுமொத்தமாக நம்பிக்கை அளிக்ககூடியதாகவும் ‘விஸ்வாசம்’ பட அனுபவம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும். அதுவும் ஃபேமலி ஆடியன்ஸ் இதனை அதிகம் விரும்புவார்கள்” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com