\
‘விஸ்வரூபம்2’விற்கு யு/ஏ சான்றிதழ்

‘விஸ்வரூபம்2’விற்கு யு/ஏ சான்றிதழ்

‘விஸ்வரூபம்2’விற்கு யு/ஏ சான்றிதழ்
Published on

கமல் நடிப்பில் நீண்ட நாட்களாக எந்தப் படமும் வெளிவராத நிலையில் விஸ்வரூபம்-2 படத்துக்கு தணிக்கை வாரியம் U/A  சான்றிதழ் வழங்கி உள்ளது.

2013-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பல தடைகளை கடந்து வெளிவந்து வெற்றியும் பெற்ற படம் ‘விஸ்வரூபம்’. இந்தப் படம் எடுக்கும் போதே இதன் இரண்டாம் பாகமும் தயார் என கூறி இருந்தார் கமல் .ஆனால் அதற்குப் பிறகு ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’ ஆகிய இரு படங்கள் கமல் நடிப்பில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு  தணிக்கைத்துறை U/A சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் இது கமல் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. படத்தின் ட்ரெய்லரும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதனையொட்டி கோடைக் கொண்டாட்டமாக படம் வெளியாக உள்ளது. இச்செய்தியை கமல் ரசிகர்கள் ட்விட்டரில் மிக வேகமாக பரப்பி வருகின்றனர்   

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com