\
'ஜோசப்' ரீமேக் 'விசித்திரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஜோசப்' ரீமேக் 'விசித்திரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஜோசப்' ரீமேக் 'விசித்திரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் விசித்திரன் திரைப்படம் மே 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ’விசித்திரன்’ திரைப்படம். ஜோஜு ஜார்ஜ், பிரபல இயக்குநர் திலீஷ் போத்தன், ஆத்மியா நடிப்பில் வெளியான இப்படத்தை எம். பத்மகுமார் இயக்கியிருந்தார். தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, அது விபத்தல்ல கொலை என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார்.

மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் குவித்த இந்தக் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய எம்.பத்மகுமாரே தமிழிலும் விசித்திரன் படத்தை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோஜு ஜார்ஜ் வேடத்தில் ‘விசித்திரன்’ படத்தில் ஆர்.கே சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த படம் மே 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com