‘காலா’வை முந்துகிறதா ‘விஸ்வரூபம்2’ ?

‘காலா’வை முந்துகிறதா ‘விஸ்வரூபம்2’ ?
‘காலா’வை முந்துகிறதா ‘விஸ்வரூபம்2’ ?

ஏப்ரல் 27ல் ‘காலா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக ‘விஸ்வரூபம்2’ வெளியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழக அரசியலில் ரஜினி கட்சி தொடங்குவதற்கு முன்பு அவசர அவசரமாக கமல் கட்சி ஆரம்பித்தார். அதேபோல் ரஜினி ஒவ்வொரு அசைவிற்கும் முன்பாக சுதாரித்து கொண்டு தன்னை முன்னிறுத்தி வருகிறார் கமல். ஏப்ரல் 27 ‘காலா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக தனது ‘விஸ்வரூபம்2’வை கமல் வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் வரும் மாதம் இசை வெளியீடுடன் கூடிய ட்ரெய்லர் விழாவை நடத்துவதற்கான வேலைகளில் வேகம் காட்ட தொடங்கி இருக்கிறார்  கமல். இதற்கான ஒரு பிரமாண்ட விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதனால் அரசியல் வட்டத்தில் சில மாதங்களாக மையமாக செயல்பட்டு பட்டு வந்த கமல்,ரஜினி போட்டி மீண்டும் திரைத்துறை பக்கம் திரும்பியுள்ளது. தனது ரசிகர்களை எப்போதும் உற்சாகத்தில் வைத்து கொள்வது சம்பந்தமாக இருவருக்குள்ளும் போட்டி சூடுப் பிடித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com