வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால்!

வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால்!

வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால்!
Published on

வசந்த பாலன் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உட்பட சில படங்களை இயக்கியவர், வசந்தபாலன். இவர் இப்போது ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து நடிக்கும் ’ஜெயில்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தை அடுத்து வசந்தபாலன் இயக்கும் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொன்னார் வசந்தபாலன். அதைக் கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்துள்ளார் அவர்.

பிரபுசாலமன் இயக்கும் ’காடன்’ ஷூட்டிங் நடந்த விபத்தில் காயமடைந்துள்ள விஷ்ணு விஷால், இப்போது ஓய்வெடுத்து வருகிறார். அவர் உடல் நலம் சரியானதும் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com