தீவிர ரஜினி ரசிகர் சிவகார்த்திகேயன். அதனால்தான் தனது படத்திற்கு ரஜினிமுருகன் என டைட்டில் வைத்து நடித்தார்.
ஆனால் கமல் ரசிகர்களையும் பேலன்ஸ் செய்ய வேண்டுமே. அதனால் தான் அவர் நடித்த காக்கிசட்டை படத்தின் டைட்டிலிலும் நடித்தார். ஆனால், இப்போது சிவகார்த்திகேயனின் வருத்தப்படதா வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்ற ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’என்ற வசனத்தை தன் புதிய படத்திற்கு டைட்டிலாக வைத்து இருக்கிறார் விஷ்ணு. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன் படங்களை தொடர்ந்து இந்தப்படத்தையும் தயாரித்து, நடிக்கவிருக்கும் விஷ்ணுவுக்கு ஜாக்பாட்தான். காரணம், ரெஜினா, ஓவியா என இரு ஹீரோயின்களுடன் டூயட் பாட இருக்கிறாராம்.

