\
கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த விஷால்

கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த விஷால்

கீழ் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த விஷால்
Published on

’எனிமி’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடிகர் விஷால் திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார்.

நாளை தீபாவளி வெளியீடாக விஷால், ஆர்யா நடிப்பில் ’எனிமி’ வெளியாகவுள்ளது. இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் ’எனிமி’ படக்குழு புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றது.

இதற்கிடையில், நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. திருப்பதி சென்ற அவர் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு  நடந்தே சென்று ஏழுமலையானை தற்போது தரிசனம்  செய்து வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com