\
தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால்

தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால்

தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால்
Published on

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்ததாக நடிகர் விஷால் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து விஷால் மன்னிப்பு கோரியதால் அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை நடிகர் கமலஹாசன் முன்மொழிய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விஷால் அணியின் பொருளாளர் பதவிக்கு நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பு போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com