“சரத்குமாரிடம் பிடித்தது வரலக்ஷ்மி”: விஷால் சுவாரஸ்யம்

“சரத்குமாரிடம் பிடித்தது வரலக்ஷ்மி”: விஷால் சுவாரஸ்யம்

“சரத்குமாரிடம் பிடித்தது வரலக்ஷ்மி”: விஷால் சுவாரஸ்யம்
Published on

சரத்குமாரிடம் பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு நடிகர் விஷால் சுவாரஸ்யமான பதிலை தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாகவே விஷால், நடிகை வரலக்ஷ்மியை இணைந்து வைத்து வதந்திகள் வலம் வந்தபடியேதான் உள்ளன. ஆனால் இந்த வதந்திக்கு இருவரும் வெளிப்படையாக பதில் சொல்லாமல் பூசிமெழுகி பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். இடையில் விஷாலை விட்டு வரலக்ஷ்மி பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. வரலக்ஷ்மிக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே உள்ள வதந்திக்கு மத்தியில் அவரது அப்பா சரத்குமாரும் சிக்கிக் கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துவிட்டதாக விஷால் கூற, வில்லங்கம் விபரீதமாக வெடித்தது. இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டது. இறுதியில் விஷாலும் சரத்குமாரும் இருவேறு துருவங்கள் ஆனார்கள். 

இந்நிலையில் பல வருட இடைவெளிக்குப் பிறகு ஒரு வார பத்திரிகைக்கு நடிகர் விஷால் பேட்டி அளித்திருந்தார். அதில் அவரிடம் ‘சரத்குமாரியம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “அவரிடம் பிடித்த விஷயம், அவரது ஃபிட்நஸ். அதைத்தாண்டி, அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம், அவர் வரலக்ஷ்மியின் அப்பா” என எடக்கு மடக்காக பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com