திருட்டு விசிடிக்காரர்களை பிடித்துக்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: விஷால் தகவல்

திருட்டு விசிடிக்காரர்களை பிடித்துக்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: விஷால் தகவல்

திருட்டு விசிடிக்காரர்களை பிடித்துக்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: விஷால் தகவல்
Published on

தியேட்டரில் கேமரா வைத்து திருட்டு வி.சி.டி தயாரிக்க உதவுவோரை பிடித்துக் கொடுக்க உதவினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கூறினார்.

கார்த்திகேயன் வழங்க, மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கியுள்ள படம், ’விளையாட்டு ஆரம்பம்’. இதில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஸ்ராவியா நடிக்கிறார் . இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில், கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் பாலா, அருண்பாண்டியன், தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ், பி.எல்.தேனப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் விஷால் பேசும்போது, ’தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம். தியேட்டரில் படம் ஓடும் போது அதை கேமரா வைத்து காப்பி செய்து, திருட்டு வி.சி.டி தயாரிக்க வேலை செய்பவர்களை, கையும் களவுமாகப் பிடித்து தியேட்டர் போலீஸில் எப்.ஐ.ஆர் போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ருபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்’ என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com