நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா: விஷால் தகவல்
செவாலியே விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெறவிருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். இதில் பிரதமர் கலந்து கொள்ள வழிவகை செய்யுமாறு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் விஷால் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் நடிகர் விஷால் பங்கேற்றுப் பேசினார். அப்போது திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஷால் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் உள்ளி்ட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியார்களிடம் பேசிய விஷால், திரை துறை சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சரிடன் மூன்று முக்கிய கோரிக்கை முன்வைத்தோம் என்றார். அதில் இணைய தளங்களில் புதிய படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அமைச்சம் மூலம் உயர்மட்ட கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதி அளித்தாகக் குறிப்பிட்டதை தெரிவித்த விஷால், தமிழகத்தில் குறைந்த பட்ஜெட் படங்கள் அதிகம் எடுப்பதால் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில் மாற்றங்கள் வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் வரும் 25ம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில், நான் போராட்டத்தில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார்.