\
‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்
Published on

‘இரும்புத்திரை’ ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸாகிறது.

மித்ரன் சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. இதில் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். துப்பாக்கி முனையில் விஷால் விளையாட்டாக அர்ஜூனை மிரட்டும் புகைப்படம் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் விஷால் வெளியிட்டிருந்தார்.இதில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் இப் படத்தைத் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படம், ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் ஃபர்ஸ்ட் லுக், நாளை ரிலீஸாக இருக்கிறது. அடுத்த மாதம் இசை வெளீயிட்டு விழா நடைபெற உள்ள இத்திரைப்படம் வரும் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com