"திருமணம் ரத்தானது உண்மையே!" - நடிகர் விஷால் தரப்பு

"திருமணம் ரத்தானது உண்மையே!" - நடிகர் விஷால் தரப்பு
"திருமணம் ரத்தானது உண்மையே!" - நடிகர் விஷால் தரப்பு

’நடிகர் விஷால் திருமணம் ரத்து’ என்ற தகவல் பரவிவந்த நிலையில், ’அந்த தகவல் உண்மைதான்’ என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் விஷாலுக்கு நெருக்கமானவர்கள்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் திருமணங்களில் ஒன்று நடிகர் விஷாலின் திருமணம். காரணம் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி, அதில்தான் தனது திருமணம் நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு துவக்கத்தில் தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டிக்கும் இவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி ஹைதரபாத்தில் நட்சத்திர ஓட்டலில் நிச்சயத்தார்த்தமும் நடந்தது. அனிஷா அர்ஜுன் ரெட்டி, பெல்லி சூப்புலு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், விஷாலுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்துவந்த அனிஷா திடீரென்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயத்தார்த்த புகைப்படங்களை நீக்கி அதிர்ச்சி அளித்தார். அப்போதே இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், இதுகுறித்து விஷால், அனிஷா தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், விஷால் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகவும், அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட அனிஷாவுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வரும் ஜனவரியில் திருமணம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகர் விஷாலின் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து, விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, விஷாலுக்கு திருமணம் ரத்து செய்யப்பட்டது உண்மைதான் என்ற தகவலை உறுதி செய்தனர். ’விஷால் திருமணம் செய்யவிருந்த அனிஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் என்று சொல்லப்படுகிறதே? என்று கேட்டபோது “அதுகுறித்து தெரியாது” என்று என்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com