\
”லைகாவிடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை விஷால் செலுத்தவேண்டும்” : நீதிமன்றம்

”லைகாவிடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை விஷால் செலுத்தவேண்டும்” : நீதிமன்றம்

”லைகாவிடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை விஷால் செலுத்தவேண்டும்” : நீதிமன்றம்
Published on

”லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும்” என்று நடிகர் விஷலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக அன்புச்செழியனிடமிருந்து பெற்ற ரூ. 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. அந்தத் தொகையை செலுத்தாமல் "வீரமே வாகை சூடும்" படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்கவும் கோரி லைகா வழக்கு தொடர்ந்திருந்தது.

மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்து, டெபாசிட் ரசீதை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு மார்ச் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com