தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால், தனது வேட்பு மனுவில், எந்தப் பதவிக்குப் போட்டியிடுகிறார் என்ற கோட்டை நிரப்பாமல் கோட்டை விட்டிருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நீதியரசர் எஸ். ராஜேஸ்வரனிடம் நடிகர் விஷால் தாக்கல் செய்தார். இந்த மனுவில் விஷாலை தலைவர் பதவிக்கு முன் மொழிந்த கமல்ஹாசன் அவருடைய நிறுவனம், அவரது பெயர் மற்றும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் பெயர் மற்றும் அவர் எந்த பதவிக்கு போட்டியிடுகிறார் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்துள்ளார்.
ஆனால் இந்த பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் விஷால் அந்த படிவத்தில் தனது பெயர், நிறுவனத்தின் பெயர் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்துள்ளார். ஆனால் தான் போட்டியிடும் பதவியை குறிப்பிடுவதில் கோட்டை விட்டுள்ளார்.
விஷாலை தலைவர் பதவிக்கு முன் மொழிந்த கமல் தான் பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்திருப்பதோடு, கையெழுத்தையும் மறக்காமல் போட்டிருக்கிறார்.
ஆனால் கமலை வழி மொழிந்த ஐசரி கணேஷ், மற்ற விபரங்களை எல்லாம் பூர்த்தி செய்து விட்டு கையெழுத்தைப் போட மறந்து விட்டார்.

