”ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வை சிதைக்கிறீங்க” - திருமணம் குறித்து பரவும் தகவலுக்கு விஷால் மறுப்பு

நடிகை லட்சுமி மேனனுடன் நடிகர் விஷால் திருமணம் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஷால்.
விஷால் - லட்சுமி மேனன்
விஷால் - லட்சுமி மேனன்கோப்பு புகைப்படம்

கடந்த சில நாட்களாக நடிகர் விஷால் - நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ''லக்‌ஷ்மி மேனனும் நானும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக பரவும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. நேரம் வரும்போது, என் திருமண அறிவிப்பை நானே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவேன்

விஷால் - லட்சுமி மேனன்
விஷால் - லட்சுமி மேனன்

பொதுவாக நான் வதந்திகளுக்கு விளக்கமளிப்பதில்லை; இருப்பினும் இதற்கு சொல்ல காரணம் இதில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார். வதந்தி பரப்புபவர்கள், ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வை சிதைக்கிறீர்கள்; அவரின் பிம்பத்தை இழிவுபடுத்துகின்றீர்கள்

எதிர்காலத்தில் நான் யாரை, எப்போது, எந்த நேரத்தில், எந்த வருடத்தில் திருமணம் செய்வேன் என சொல்வதற்கு இதுவொன்றும் பெர்முடா முக்கோணம் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com