“விஷால் நிரந்தர எதிரி இல்லை” சிம்பு ஓபன் டாக்

“விஷால் நிரந்தர எதிரி இல்லை” சிம்பு ஓபன் டாக்

“விஷால் நிரந்தர எதிரி இல்லை” சிம்பு ஓபன் டாக்
Published on

தன்னுடைய ரசிகர்கள் யாரும் இனி தனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர் சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த சிம்பு தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இறந்த தன் தீவிர ரசிகரும், ரசிகர் மன்ற நிர்வாகியுமான மதன் என்பவரின் 9-ம் நாள் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தானே போஸ்டர் ஒட்டினார் நடிகர் சிம்பு. இந்தப் புகைப்படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

இதை பலரும் பாராட்டி வந்த நிலையில் நடிகர் விவேக் சிம்புவை விமர்சித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டரில் ‘தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்தச் சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார். அவர் இடம் அப்படியே இருக்கிறது’ என்றார். 

இந்நிலையில் நடிகர் விவேக் - தேவயாணி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய சிம்பு ‘எல்லோருக்கும் நான் தான் நடிகர் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அன்றைய தினம் விவேக் மனசு வைக்கவில்லை என்றால் நடிகர் சந்தானம் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்க முடியாது’ என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சங்க விவகாரத்தில் விஷால் எடுத்த சில முடிவுகளில் எனக்கு உடன்பாடுயில்லை என்றும், அதனால் அன்று நான் அவரை எதிர்க்க வேண்டிய சுழல் ஏற்பட்டதாகவும், நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக அவரை நிரந்தரமாக பிடிக்கக் கூடாது என எதும் இல்லை என்றார். மேலும் அதன் அடிபடையிலே தான் நடிகர் சங்க கட்டித்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் தான் கலந்து கொண்டதாகவும், முதலில் என்னை நடிகர் சங்க உறுப்பினர் என்கிற முறையில்  அழைத்த விஷாலுக்கு நன்றி என்றார். தன்னை தொடர்ந்து இயக்குவது என்னுடைய ரசிகர்கள்தான் அவர்களுக்கு என்னுடைய நன்றி எனக் குறிப்பிட்டார். கட் அவுட் விவகாரத்தில் தன்னுடைய ரசிகர் கொல்லப்பட்டதிற்கு வருந்திய அவர் தன்னுடைய ரசிகர்கள் யாரும் இனி தனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம் என நடிகர்  கேட்டுக் கொண்டுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com