\
விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் - ஆர்யாவின் ‘எனிமி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் ’எனிமி’ வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

’அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், தற்போது விஷால் - ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த, திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. ‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

சமீபத்தில்தான், இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. டீசர் வெளியாகியும் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஆயுதபூஜையையொட்டி ‘எனிமி’ வெளியாகும் என்று நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com