"Censor Board-ல் லஞ்சம் கேக்குறாங்க; எதாவது பண்ணுங்க மோடிஜி"- Transaction விவரத்துடன் விஷால் புகார்!

மார்க் ஆண்டனி பட ஹிந்தி வெளியீட்டுக்காக தணிக்கைக்குழு தரப்பில் ரூ.6.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.
vishal
vishalfile image

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியான மார்க் ஆண்டனி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் இந்தி வெளியீட்டுக்காக தணிக்கை குழு தரப்பிற்கு ரூ.6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை நடிகர் விஷால் முன்வைத்துள்ளார்.

பணப் பரிவர்த்தனைக்கான தகவல்களையும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "சினிமாவில் ஊழல் காட்டப்படலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் கூடாது. மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக திரைப்பட தணிக்கை குழு 6.5 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளது. படத்தை பார்ப்பதற்கு ரூ. 3 லட்சமும், தணிக்கை சான்றுக்கு 3.5 லட்சமும் லஞ்சம் பெற்றுள்ளது. படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு அணுகியதால், வேறு வழி இல்லாமல் பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது”

“எனது கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊழலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இந்த விவகாரத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.

இனி இதுபோன்ற விஷயங்கள் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்கக்கூடாது” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com