\
'மாஸ்டர்' வெற்றியால் ஓ.டி.டி வெளியீட்டை கைவிட்ட விஷால்!

'மாஸ்டர்' வெற்றியால் ஓ.டி.டி வெளியீட்டை கைவிட்ட விஷால்!

'மாஸ்டர்' வெற்றியால் ஓ.டி.டி வெளியீட்டை கைவிட்ட விஷால்!
Published on

விஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படத்தை ஓடிடி-யில் வெளியிடும் முடிவு கைவிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'சக்ரா' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்காக 45 கோடி ரூபாய் வரை கொடுக்க பிரபல OTT நிறுவனம் தயாராக இருந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், 'சக்ரா' படத்தை திரையரங்குகளில் வெளியிட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் முடிவெடுத்துள்ளார் மேலும் பிப்ரவரி 12 அல்லது மார்ச் 11-ம் தேதியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் விஷால். இந்தப் படம் 'இரும்புத்திரை' பட பாணியில் உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com