சினிமா
விஷால் நடிக்கும் 32வது படம் - நாளை படப்பிடிப்பு தொடக்கம்
விஷால் நடிக்கும் 32வது படம் - நாளை படப்பிடிப்பு தொடக்கம்
விஷால் நடிக்கும் அவரின் 32ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 29-ஆம் தேதி தொடங்க உள்ளது.
விஷால் தற்போது து.ப.சரவணன் இயக்கியுள்ள 'வீரமே வாகை சூடும்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கான முதல் பார்வை நாளை வெளியாகிறது. அதேபோல் படத்தின் 98 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை விஷால் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.
அந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் என்பவர் இயக்கவுள்ளார். அதற்கான படப்பிடிப்பு விஷாலின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த திரைப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
-செந்தில்ராஜா