\
மிஷ்கினின் துப்பறிவாளனில் கணியன் பூங்குன்றன்!

மிஷ்கினின் துப்பறிவாளனில் கணியன் பூங்குன்றன்!

மிஷ்கினின் துப்பறிவாளனில் கணியன் பூங்குன்றன்!
Published on

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கும் படம், ’துப்பறிவாளன்’.

படம் பற்றி மிஷ்கின் கூறும்போது, ’இது ஒரு தனியார் டிடெக்டிவ் ஆபிசர் மற்றும் அவர் துப்பறியும் விஷயங்கள் பற்றி பேசும் படம். துப்பறியும் ஆங்கில நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த ‘துப்பறியும் சாம்பு’ போன்ற கதையாக இருக்கும். விஷால், கணியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ’யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்று பாடிய கணியன் பூங்குன்றனார் பெயரை தான் வைத்துள்ளேன். இதில் விஷால் ஏற்றுள்ள கதாபாத்திரம் பலமானது. படத்தில் விஷாலுடன் பயணிக்கும் முக்கிய கேரக்டரில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய் சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், மெல்லிய காதல் இதுதான் துப்பறிவாளன் ஸ்பெஷல். சண்டை காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்படும். நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலை போன்று எனக்கு நெருக்கமானவர் யாருமில்லை. நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுகொள்வேன். அவரும் என் கருத்துக்களை ஏற்றுகொள்வார்’ என்றார்.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com