வைரலாகும் விராட் கோலியின் ‘அபார்ட்மெண்ட்’ புகைப்படங்கள்
சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரபலங்கள் விராட் கோலி, அனுஷ்கா சர்மா. அவர்களது திருமணம் மட்டுமின்றி புதுமணத் தம்பதிகள் குடியேறிய ‘அபார்ட்மெண்ட்’ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் மும்பையில் வார்லி என்ற புது அபார்ட்மெண்டில் குடியேறியனர்.
இந்நிலையில் விராட்டின் வீட்டை முறியடிக்கும் வகையில் 2015-ல், 5,500 சதுர அடியில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் வாங்கிய சொகுசு பங்களாவின் புகைப்படமும் தற்பொழுது சமூக வலைத்தளங்களின் வைரலாக பரவி வருகிறது. இந்தச் சொகுசு பங்களாவின் மொத்த விலை ரூ.21 கோடி. இந்த அடுக்குமாடி குடியிருப்பு பாந்த்ராவில் குர்லா வளாகத்தில் இந்த உயர்ந்தக் குடியிருப்பு அமைந்துள்ளது.
ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் தங்களின் வீட்டின் உட்புறங்களில் செய்துவுள்ள கலை வண்ணங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களின் வைரலாகி வருகின்றன.