கேரளாவில் நடிகர் விஜயின் தீவிரமான பெண் ரசிகை ஒருவரின் புகைப்படம் விஜய் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் திரைப்படம் ‘மெர்சல்’. இதில் நித்யா மேனன், சமந்தா, வடிவேலு என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பல தடைகளை தாண்டி இந்த திரைப்படம் நாடு முழுவதும் தீபாவளி தினந்தன்று வெளியாகியது. இந்த படத்தின் முதல் நாள் காட்சி வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது, இந்நிலையில் மெர்சல் திரைப்படம் கேரளாவில் பல முன்னணி திரையரங்குகளில் திரையிடைப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.
இந்நிலையில் கொச்சியில் உள்ள ஒரு திரையரங்கில், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர், விஜய் புகைப்படம் அமைந்துள்ள கட் அவுட் மீது ஏறி பூக்களைக் கொட்டியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட விஜய் ரசிகர்கள் பலர், சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பதிவிட்டு வருகின்றனர்.