\
'கார் பொம்மை வேண்டும்' - அடம் பிடித்த அஜித்தின் மகன்!

'கார் பொம்மை வேண்டும்' - அடம் பிடித்த அஜித்தின் மகன்!

'கார் பொம்மை வேண்டும்' - அடம் பிடித்த அஜித்தின் மகன்!
Published on

கார் பொம்மை வேண்டுமென அஜித்தின் மகன் அடம் பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

தான் ஒரு நடிகர் என்றாலும் தனக்கு பிடித்தமான ஏரோ மாடலிங் தயாரிப்பு, போட்டோகிராபி, சமையல், மெக்கானிக், பைக், கார் ரேஸ் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் அஜித்குமார். குறிப்பாக அஜித், கார் பைக் ஓட்டுவதில் வல்லவர். பல படங்களில் டூப் இல்லாமல் அவரே கார், பைக் ஸ்டண்டுகளை செய்துவிடுவார். 

தன்னுடைய ஆரம்பகாலத்தில் மெக்கானிக்காக இருந்த அஜித், கார் பந்தயங்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவர் மகன்  ஆத்விக்கும் காரின் மீதே பிரியம் கொண்டு இருப்பதாக அவர் ரசிகர்கள் கூறி வீடியோ ஒன்றை ட்ரெண்டு செய்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் தாய் ஷாலினியுடன் ஷாப்பிங் சென்ற ஆத்விக், ஒரு கார் பொம்மையை எடுத்துக்கொண்டு வாங்கித்தர வேண்டுமென அடம்பிடிக்கிறார். ஆத்விக்கை செல்லமாக அதட்டும் ஷாலினி கார் பொம்மையை வாங்கிக்கொடுக்காமல் அழைத்துச்செல்கிறார்.  

செல்போன் கேமராவில் யாரோ எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கசிய, அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ட்ரெண்டு செய்து வருகின்றனர். ஷாலினி, ஆத்விக்குடன் சிலர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com