\
இணையத்தை தெறிக்கவிடும் அஜித்தின் பைக் ஸ்டண்ட் போட்டோ

இணையத்தை தெறிக்கவிடும் அஜித்தின் பைக் ஸ்டண்ட் போட்டோ

இணையத்தை தெறிக்கவிடும் அஜித்தின் பைக் ஸ்டண்ட் போட்டோ
Published on

’வலிமை’ படத்தின் ஒரு காட்சிக்காக அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சி போட்டோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.

ஹைதராபாத், வைசாக் மற்றும் பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கே படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்த இந்த படம் வெளிவர சற்று தாமதமாகும் என்ற செய்தி ரசிகர்களை சற்று சோர்வடைய செய்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் ’தல’ ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

’வலிமை’ படத்தின் ஒரு காட்சிக்காக அஜித் செய்த பைக் ஸ்டண்ட் காட்சி போட்டோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ட்ரெண்டிங்கில் உள்ள இந்த புகைப்படத்தை பலரும் ஷேர் செய்துவருகின்றனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக படம் தொடர்பான யாரும் இந்த படத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com