’இருக்கு ஆனா இல்ல’ - ஐஸ்வர்யா ராய் ஜாடையில் வைரலான டிக்டாக் பிரபலம்!
ஐஸ்வர்யா ராய் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜிவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ’கண்டுகொண்டேன். கண்டுகொண்டேன்’.2000ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்திற்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
இப்படத்தில் வரும் பல காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. குறிப்பாக மம்முட்டியிடம் ஐஸ்வர்யா ராய் காதலை வெளிப்படுத்தும் காட்சியும், அந்த வசனமும் எவர்கிரீன். அந்தக் குறிப்பிட்ட வசனம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது. காரணம் ஐஸ்வர்யா ராய் அல்ல. அவரைப்போல இருக்கும் மற்றொருவர்.
ஐஸ்வர்யாராய் போல தோற்றம் கொண்ட Ammuzz Amrutha என்ற பெயர் கொண்ட டிக்டாக் பிரபலம் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தின் காட்சிக்கு வாயசைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள் இந்தப்பெண் ஐஸ்வர்யாராய் போலவே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் காதலை வெளிப்படுத்தும் அந்தக் காட்சியை அதே உயிர்ப்புடன் நடித்திருப்பதாகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். டிக்டாக்
வீடியோ மூலம் Ammuzz Amrutha தற்போது வைரலாகி வருகிறார்.