\
கஜோலை அப்படி சொல்லாதீங்க: தனுஷ்

கஜோலை அப்படி சொல்லாதீங்க: தனுஷ்

கஜோலை அப்படி சொல்லாதீங்க: தனுஷ்
Published on

தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்த படம், ‘வேலையில்லா பட்டதாரி’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள். இதில் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். 

இந்தப் படம் பற்றி தனுஷ் கூறும்போது, ’முதல் பாகத்தில் இருந்ததை போன்று குடும்பம், சென்டிமென்ட் போன்ற விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்கும். கூடவே சமூகத்துக்கு தேவையான மெசேஜும் இருக்கிறது. இதில் கஜோல் வில்லியாக நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்லாதீர்கள். படத்தில் இரண்டு முக்கியமான கேரக்டர்கள் இருக்கிறது. அதில் ஒரு முக்கியமான கேரக்டரில் கஜோல் நடிக்கிறார்’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com