\
விஐபி-2, விவேகம் படத்துடன் மோதலை தவிர்த்த ‘நெருப்புடா’

விஐபி-2, விவேகம் படத்துடன் மோதலை தவிர்த்த ‘நெருப்புடா’

விஐபி-2, விவேகம் படத்துடன் மோதலை தவிர்த்த ‘நெருப்புடா’
Published on

‘நெருப்புடா’ திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரைக்கு வரும் என்று படத்தின் நாயகன் விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.    

புதுமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம்  'நெருப்புடா'. தீயணைப்பு வீரராக நடித்துள்ள விக்ரம் பிரபுவுடம் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நிக்கி கல்ராணி. படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி படம் திரைக்கு வருவதாக விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நெருப்புடா' படத்திற்கு தணிக்கை குழு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்ரம் பிரபு தனது சொந்த நிறுவனமான ‘பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ மூலம் தயாரித்துள்ளார். 

ஆகஸ்ட் 11ஆம் தேதி விஐபி-2 படமும், ஆகஸ்ட் 24ஆம் தேதி விவேகம் படமும் திரைக்கு வருவதால் மோதலை தவிர்த்து செப்டம்பர் மாதம் நெருப்புடா படம் வெளியாகிறது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com