மலேசியாவில் 550 திரையரங்குகளில் விஐபி-2

மலேசியாவில் 550 திரையரங்குகளில் விஐபி-2
மலேசியாவில் 550 திரையரங்குகளில் விஐபி-2

'வேலையில்லா பட்டதாரி-2' மலேசியாவில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகிறது. 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள விஐபி-2 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதுவரை வேறு எந்த இந்திய நடிகரின் திரைப்படமும் மலேசியாவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், விஐபி-2 புது சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பாக ரஜினிகாந்தின் 'கபாலி' 480 தியேட்டர்களில் வெளியானது. விஐபி படத்தின் இரண்டாம் பாகமான இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விஐபி-2 தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com