‘சாத்தானே இங்க இருக்குடா ’ - ‘காமன் மேன்’ பட கிளிம்ப்ஸில் உறைய வைக்கும் விக்ராந்த்

‘சாத்தானே இங்க இருக்குடா ’ - ‘காமன் மேன்’ பட கிளிம்ப்ஸில் உறைய வைக்கும் விக்ராந்த்
‘சாத்தானே இங்க இருக்குடா ’ - ‘காமன் மேன்’ பட கிளிம்ப்ஸில் உறைய வைக்கும் விக்ராந்த்

இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் நடிப்பில் தயாராகி வரும் ‘காமன் மேன்’ படத்தில், நடிகர் விக்ராந்த் சாத்தானாக மிரட்டியுள்ள கிளிப்ம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் 'காமன் மேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சசிகுமார், திரைப்பட சவுண்ட் இன்ஜினீயராக நடிக்கிறார். கன்னட திரையுலக நடிகை ஹரிப்பிரியா மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'காமன் மேன்' படத்தில் ரத்தம் உறைய வைக்கும் கொலை குற்றவாளியாகவும், சைக்கோ வில்லனாகவும் நடிகர் விக்ராந்த் நடித்துள்ள கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ‘நரகமே காலியா இருக்குடா... ஏனா, சாத்தானே இங்க இருக்குடா..’ என்ற வனசங்களுடன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே 'காமன் மேன்' என்ற தலைப்பின் உரிமை எங்களிடம் உள்ளது என்று ஏ.ஜி.ஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் முறையீடு செய்துள்ளது.

இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில், கடந்த 2018-ம் ஆண்டே 'காமன் மேன்' என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாக ஏ.ஜி.ஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சசிகுமார் படத்தின் 'காமன் மேன்' என்ற தலைப்பை சென்சார் போர்டு ஏ.ஜி.ஆர். ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக கொடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவிப்பு வெளியான சசிகுமாரின் படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com