விக்ரமன் செய்வது அனைத்தையும் ஏற்க முடியாது: விசு

விக்ரமன் செய்வது அனைத்தையும் ஏற்க முடியாது: விசு
விக்ரமன் செய்வது அனைத்தையும் ஏற்க முடியாது: விசு

இயக்குனர் சங்கத் தலைவராக இருக்கும் விக்ரமன் செய்வது அனைத்தையும் ஏற்க முடியாது என்று இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விக்ரமன், பெப்சியோடு இணைந்து தயாரிப்பாளர்களுக்கு எதிராக, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் விசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தயாரிப்பாளர்களோடு இணைந்து, இயக்குனர்கள் சங்கம் படப்பிடிப்பை நடத்தும் என நினைத்தே அணிலின் ஒத்துழைப்பாக, ஒரு உதவி இயக்குனராக, களத்தில் பணி புரியத் தயார் என வாக்குறுதி அளித்தேன் விக்ரமனுக்கு. பதில் இல்லை. ஆனால் இப்போது நமது இயக்குனர்கள் சங்கம் பெப்சியோடு இணைந்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிகிறேன். விக்ரமன் இயக்குனர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அவரை வாழ்த்த முடியுமே தவிர, அவர் செய்வது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள இயலாது. அதே offer ஐ வேறொரு இயக்குனருக்குத் தரத் தயாராக இருக்கிறேன்.

ஷூட்டிங் நடத்தத் தயாராக இருக்கும் இயக்குனர் யாராவது இருந்தால், அவரது உதவி இயக்குனர் FEFSIக்குக் கட்டுப்பட்டு வரத்தயங்கினால், படப்பிடிப்புக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் உதவி இயக்குனராகப் பணி புரியத் தயார், இயக்குனருக்குத் தேவைப்பட்டால் மட்டுமே. Dialysis ல் இருக்கும் எனது உடல் அதற்கு மேல் ஒத்துழைக்காது, மனம் ஒத்துழைத்தாலும். ஒரு யூனியனோ அல்லது அதன் நிர்வாகியோ பெருமைக்குரிய தயாரிப்பாளர் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரைத் தரக்குறைவாகப் பேசியதை என்றும் என்னால் ஒப்புக் கொள்ள இயலாது’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com