ஸ்டைலிஷ் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலிக்கு வில்லனாக விக்ரம் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா வெற்றிக்குப் பின்னர் தனுஷின் எனைநோக்கிப் பாயும் தோட்டா பட ரிலீஸ் வேலைகளில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பிஸியாக இருக்கிறார். இந்தநிலையில், பிரேமம் புகழ் நிவின் பாலி, கவுதம் மேனனை கதை விவாதம் தொடர்பாக சமீபத்தில் சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் புதிய படம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த படத்தில் நிவின் பாலிக்கு இரட்டை வேடம் என்றும், வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.