இரட்டை வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்குகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விக்ரம் வேதா படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.
முதல்முறையாக மாதவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள விக்ரம் வேதா படத்தை இரட்டை இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். இந்த படம் ஜூலை 7ல் வெளியாக இருந்தநிலையில், தியேட்டர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் படத்தின் ரிலீஸும் காலவரையின்றி தள்ளிப்போடப்படுவதாக தயாரிப்பாளர் எஸ்.சசிகாந்த் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டம் திரும்பப்பெற்ற பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.