’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்: எப்போது வெளியீடு?

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்: எப்போது வெளியீடு?
’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்: எப்போது வெளியீடு?

’விக்ரம் - வேதா’ இந்தி ரீமேக்கின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. ரிலீஸ் டேட் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி - மாதவன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘விக்ரம் வேதா’ தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும், மாதவன் கதாபாத்திரத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கிறார்கள். ஒரு வருடங்களுக்கும் மேலாக படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டிந்த நிலையில், சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துபாயில் தொடங்கியது.

அங்கு 27 நாட்கள் நடைபெற்ற படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் லக்னோவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ‘விக்ரம் வேதா’ வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com